/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
/
கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 21, 2024 06:41 AM

நத்தம் : நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் திருவிழாவில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 13-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை 7 :00 மணிக்கு மணிக்கு நடக்கிறது. நாளை பூப்பல்லாக்கு , 23-ம் தேதி காலை உற்ஸவ சாந்தி விழா நடைபெறுகிறது.

