/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி மாரியம்மன் கோயில் விழாவில் திருக்கம்பம்: பக்தர்கள் பரவசம்
/
பழநி மாரியம்மன் கோயில் விழாவில் திருக்கம்பம்: பக்தர்கள் பரவசம்
பழநி மாரியம்மன் கோயில் விழாவில் திருக்கம்பம்: பக்தர்கள் பரவசம்
பழநி மாரியம்மன் கோயில் விழாவில் திருக்கம்பம்: பக்தர்கள் பரவசம்
ADDED : பிப் 27, 2025 01:31 AM

பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப்.21ல்முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப். 25 காலை காலியாளர் திருக்கம்பத்திற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெற்றது. வடக்கு கிரி வீதியில் துர்கை அம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் கம்பம் வெட்டப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல், மார்ச் 11 ல் திருக்கல்யாணம், மார்ச் 12 ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.