/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதுவும் தேவை தானே வீடு, கடைகளில் அவசியம் கண்காணிப்பு கேமரா குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பெரும் உதவி

ADDED : ஆக 07, 2024 05:56 AM

மாவட்டத்தில் நகர, கிராம பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளை கண்டறியவும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் கண்காணிப்பு கேமரா முக்கிய பங்காற்றி வருகிறது.
பெரும்பாலும் நகர்ப்புறத்தில் முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் குற்றம் நடைபெறும்போது எளிதாக கண்டறிய முடிகிறது.
புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது.
அப்பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. தனிநபர் வீடு கட்டும்போது வீட்டின் கட்டுமான செலவுடன் வீட்டிற்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்துவதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இதனால் வீடு பாதுகாக்கப்படுவதுடன் அப்பகுதியும் பாதுகாப்பாக இருக்கும். மிகப் பெரிய வணிக வளாகங்கள் மட்டுமன்றி சிறிய கடைகளுக்கும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கொள்வது அவசியமாகிறது.
வர்த்தக சங்கத்தினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் இணைந்து கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக போலீசாரும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.