/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் யானை தந்தம் விற்க முயன்ற மூவர் கைது
/
'கொடை'யில் யானை தந்தம் விற்க முயன்ற மூவர் கைது
ADDED : ஆக 12, 2024 12:36 AM
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானை தந்தத்தை விற்க முயன்ற தி.மு.க., கவுன்சிலர் பொன்வண்ணன் 48, உட்பட மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மதுரை வன உயிரின குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைத் தந்தங்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் யானை தந்தத்தை மன்னவனுாருக்கு விற்பனைக்கு கொண்டு வந்த கீழானவயலைச் சேர்ந்த சந்திரசேகர் 64, பட்டிவீரன்பட்டி முருகேசன் 32, பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் பொன்வண்ணன், ஆகியோரை கைது செய்து மன்னவனுார் ரேஞ்சர் திருநிறைசெல்வனிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

