/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யானை பற்களை விற்க முயன்ற மூவர் கைது
/
யானை பற்களை விற்க முயன்ற மூவர் கைது
ADDED : டிச 01, 2024 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே யானை தந்தத்தை கடத்தி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வன உயிரின பாதுகாப்பு பறக்கும் படை, வத்தலக்குண்டு வனச்சரகத்தினர் வத்தலக்குண்டு-மதுரை ரோட்டில் நின்றிருந்த மூவரிடம் விசாரணை செய்தனர்.
அவர்களிடம் யானையின் கோரைப்பற்கள் இரண்டு இருப்பது கண்டறியப்பட்டன. பற்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த சசிகுமார், 36, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த ஜெயராமன், 74, வீரக்கல்லை சேர்ந்த செல்லத்துரை, 49, ஆகியோரை கைது செய்தனர்.