/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.5
/
ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.5
ADDED : பிப் 15, 2025 02:23 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்து கிலோ ரூ. 5 முதல் ரூ.10 க்கு விற்றதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்தமாதம் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் கிலோ ரூ.20 க்கு மேல் விற்பனையானது.
தற்போது விளைச்சல் நன்றாக உள்ளதால் பல இடங்களில் அறுவடை தொடர்கிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக உள்ளது. இதற்கேற்ப தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையானது. பராமரிப்பு செலவு , விவசாய கூலி அதிகரிப்பு காரணமாக தக்காளியை விளைவிக்க அதிகம் செலவாகிறது. தற்போது விலை அதனை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என விவசாயிகள் தெரிவித்தனர்.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில் தமிழகத்தில் ஆங்காங்கே தக்காளி விளைச்சல் உள்ளதால் அதன் அருகிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்து கொள்வதால் விலை குறைந்துள்ளது என்றார்.