/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை உயர்ந்தது தக்காளி, முருங்கை
/
விலை உயர்ந்தது தக்காளி, முருங்கை
ADDED : மே 22, 2024 07:25 AM
ஒட்டன்சத்திரம் : முகூர்த்த சீசன், மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி, முருங்கை விலை உயர்ந்தது.
ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை சுற்று பகுதிகளில் தக்காளி, முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. ஒருசில இடங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பறிக்கப்பட்ட காய்கள் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மழை காரணமாக தக்காளி, முருங்கை வரத்து குறைந்த நிலையில் முகூர்த்த சீசன் தொடங்கியதால் வியாபாரிகள் அதிகமாக கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக தக்காளி, முருங்கை விலை உயர்ந்து விற்பனையானது. கிலோ ரூ.18க்கு விற்ற முருங்கைகாய் ரூ.30,ரூ.18க்கு விற்ற தக்காளி ரூ.32க்கு விற்பனையானது.

