/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
'கொடை' யில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று காலை முதலே சூறைக்காற்றுடன் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இங்கு இரு வாரமாக சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ய மாறுபட்ட சீதோஷ்ண நிலை நீடிக்கிறது.
காற்றால் மேல்மலை, கீழ்மலைப்பகுதியில் தொடர் மின்தடை ஏற்பட்டு மலை கிராமங்கள் இருளில் தவிக்கின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவுகிறது. மழையால் பயணியர் விடுதிகளில் முடங்கினர். இதனால் சுற்றுலா தலங்கள் பயணியரின்றி வெறிச்சோடின.