ADDED : மார் 06, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா, துணைத் தலைவர் மலைச்சாமி முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். 2வது வார்டு லக்கன் தெரு புதிய உரங்கிடங்கில் வாகனங்கள் செல்ல இடையூறாக இருக்கும் பாறைகளை உடைத்து அகற்றவும், சிட்டம்பட்டியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கவும், பால்கேணி மேட்டிற்கு ரோடு வசதி ஏற்படுத்தவும், விளை நிலங்களை சேதமாக்கும் பன்றிகளை அகற்றவும், வடமதுரையில் போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை 15 நாட்கள் கால அவகாச நோட்டீஸ் வழங்கி அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.