/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே வீட்டில் மூவர் இறப்பு வத்தலக்குண்டில் சோகம்
/
ஒரே வீட்டில் மூவர் இறப்பு வத்தலக்குண்டில் சோகம்
ADDED : ஏப் 07, 2024 01:31 AM
வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அக்ரஹாரம் கோயில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன் 78. இவரது மனைவி வசந்தா 75, ஏப்.2ல் உடல்நிலை பாதிப்பால் இறந்தார். இதைத்தொடர்ந்து சூரிய நாராயணன், அவரது சகோதரர் சுந்தரராஜன் 81, வீட்டில் இருந்தனர். அன்று முதல் வீடு பூட்டிய நிலையில் இருந்தது.
இதனிடையே நேற்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.
வத்தலக்குண்டு போலீசார் அதனை திறந்துபார்த்த போது சூரிய நாராயணன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
மற்றொரு அறையில் சுந்தரராஜனும் இறந்து கிடந்தார். ஒரே வீட்டில் இவர்கள் இறந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

