/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கறி விருந்து நாளில் கேட் பணி மறியலால் நிறுத்தப்பட்ட ரயில்
/
கறி விருந்து நாளில் கேட் பணி மறியலால் நிறுத்தப்பட்ட ரயில்
கறி விருந்து நாளில் கேட் பணி மறியலால் நிறுத்தப்பட்ட ரயில்
கறி விருந்து நாளில் கேட் பணி மறியலால் நிறுத்தப்பட்ட ரயில்
ADDED : ஜூன் 13, 2024 06:59 AM

வடமதுரை: வடமதுரையில் ரயில்வே கேட் நீண்ட நேரம் அடைக்கப்பட்டதால் அதிருப்தியான கோயில் திருவிழாவிற்கு வந்தவர்கள் தண்டவாளப் பகுதிக்குள் புகுந்து ரகளை செய்ததால் செங்கோட்டை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே காணப்பாடி ரோடு ரயில் கேட் பகுதிக்குள் தார் போடும் பணி நடந்தது. வேலாயுதம்பாளையத்தில் நடக்கும் திருவிழாவில் கறி விருந்து உபசரிப்பு நடக்கும் நாளில் கேட்டை அடைத்து பணி செய்தால் பிரச்னை வரும் என வடமதுரை போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதை கேட்காத ரயில்வே துறை திட்டமிட்டபடி கேட்டை அடைத்து பணி நடந்தது. இடையிடையே போக்குவரத்திற்கும் திறந்து விட்டனர். இறுதியாக வேகத்தடை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக வடமதுரையில் மயிலாடுதுறை செங்கோட்டை ரயில் நிறுத்தப்பட்டது. இதன்பின் ரயில் புறப்பட கேட் திறக்கப்படாததால் அதிருப்தியான மக்கள் தண்டவாளப்பகுதிக்குள் சென்று ரயிலை மறித்தனர்.
இதனால் ரயில் நடுவழியில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. வடமதுரை போலீசார் மக்களை அப்புறப்படுத்த ரயில் சென்றது.