/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயிற்சி டி.எஸ்.பி., பெயரில் போலி கணக்கு
/
பயிற்சி டி.எஸ்.பி., பெயரில் போலி கணக்கு
ADDED : ஏப் 24, 2024 12:24 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பயிற்சியிலிருக்கும் டி.எஸ்.பி.,கவுதம் பெயரில் மர்ம நபர்கள் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கியுள்ளனர்.
இதையறிந்த அவர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களான பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,எக்ஸ் தளம் போன்றவைகளை பள்ளி மாணவர்கள் முதல் உயர் அதிகாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகின்றனர். இது நல்ல விதமாகவும் உள்ளது.
கெட்ட செயல்களுக்கும் துணை போகிறது. இந்த சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஒரு சில கொள்ளை கும்பல்கள் மக்களிடம் பணம் பறிக்கின்றனர்.
அதில் ஒரு வழியான உண்மையானவரை போன்றே போலியாக கணக்கு தொடங்கி அவர் பேசுவது போலவே மர்ம நபர்கள் எதிர் தரப்பில் உள்ளவர்களிடம் பேசி பணம் பறிக்கின்றனர். சுதாரித்து கொண்டர்கள் தப்புகின்றனர். மற்றவர்கள் மர்ம நபர்கள் வீசும் வலைகளில் சிக்குகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பயிற்சி டி.எஸ்.பி.,யாக இருப்பவர் கவுதம். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.
நேற்று இவரை போலவே மர்ம நபர்கள் போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அவரது நண்பர்கள் குழுவில் இருப்பவர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர்.
இதையறிந்த கவுதம்,தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என்பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது அதை யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார்.

