ADDED : ஜூலை 14, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூலை 15-
திண்டுக்கல் ஆட்டோ, வேன், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் பாலச்சந்திரபோஸ், செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை, அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கக்கூடாது, ஆட்டோ வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தினர்.
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் தனசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் பாண்டியன், அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன செயலாளர் சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
