ADDED : ஜூலை 14, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஜூலை 15-
ஒட்டன்சத்திரம் அருகே முத்துநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் திடலில் சக்தி கலைக்குழுவின் 96வது வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடந்தது. ஒரு மாதமாக பயிற்சி பெற்ற 5 முதல் 50 வயது பெண்கள், ஆண்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடினர். வள்ளி, முருகப்பெருமானின் வரலாற்றை நினைவூட்டும் விதமாகவும், கொங்கு நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கும்மியாட்டத்தை பார்வையிட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
