ADDED : ஆக 02, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : கோணப்பட்டியில் பழங்குடி மக்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
இப்பணியை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தொடங்கினர். துணை ஆட்சியர் முருகேஸ்வரி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான்சன், மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஜெயா, அபிராமி, தலைமையாசிரியர் அன்பு குழந்தை ராஜ், ஊராட்சி துணைத் தலைவர் பஞ்சவர்ணம், செயலாளர் கருப்பையா, வி.ஏ.ஓ., கவிதா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் ,ஒருங்கிணைப்பாளர் குரு பிரசாத் , பெரியசாமி, திருமாறவர்மன் செய்திருந்தனர்.