ADDED : மே 29, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் சாணார்பட்டி அஞ்சுகுழிபட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்34.
இவர் 2020ல் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சாணார்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் கார்த்திக்கை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி கார்த்திக்கு 24 ஆண்டு சிறை தண்டனை,ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.