ADDED : செப் 03, 2024 04:40 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில் சிக்கிய அரிசி லாரியால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் டிரைவர் டயரில் காற்றை இறக்கிவிட லாரி மீட்கப்பட்டது.
திண்டிவனத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் லாரி ஒன்று அரிசியை ஏற்றி வந்தது.
நேற்று காலை திண்டுக்கல் கரூர் ரோடு வழித்தடத்தில் பல்வேறு அரிசி கடைகளில் லோடு இறக்கியதை தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு திண்டுக்கல் பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கபாதை வழியாக வந்தது.
கரூர் ரோட்டிலிருந்து பாலத்திற்குள் வரும் நுழைவு பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் லாரி சிக்கியது. இதனால் 1 மணி நேரத்திற்கும் மேல் சுரங்கபாதையில் நெரிசல் ஏற்படவாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அவ்வழியில் வந்த போலீசார் ஒருவர் நெரிசலை சரி செய்தார். டிரைவர் லாரியின் பின் டயரில் காற்றை இறக்கிவிட கம்பியில் சிக்கிய லாரி மீட்டகப்பட்டது.