ADDED : செப் 16, 2024 01:47 AM
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வழக்கறிஞரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் உட்பட இருவரை தேடுகின்றனர்.
வடமதுரை பிலாத்தை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங் 31. நண்பர் கார்த்திகேயனுடன் டூவீலரில் வடமதுரையில் திண்டுக்கல் பைபாஸ் பிரிவு பகுதியில் சென்றபோது முன்னால் முத்தனாங்கோட்டை மணிகண்டன் 39, சோனைமுத்து 37, பவுன்ராஜ் 37, மற்றொரு டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலரில் சென்றபடி சோனைமுத்து,ரோட்டில் எச்சில் துப்பியதை பகவத்சிங் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மணிகண்டன், திண்டுக்கல்லில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் நண்பர் முத்தனங்கோட்டை அமர்நாத்தை 37,வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து பகவத்சிங்கை தாக்கினர். மணிகண்டன், சோனைமுத்தை வடமதுரை போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் அமர்நாத், பவுன்ராஜ் ஆகியோரை தேடுகின்றனர்.