ADDED : பிப் 26, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் முக்கிய சாலை ஓரங்களில் நிறுத்தி உள்ள சரக்கு வாகனங்களில் இருந்த பேட்டரிகள் சில நாட்களாக திருடு போனது.
இடும்பன் கோயில் அருகில் வாகனத்தில் பேட்டரி திருடு போனது குறித்து கலையரசன் 25 ,போலீசில் புகார் அளித்தார். போலீசார் பெரிய கடை வீதியைச் சேர்ந்த திவாகர் 29, அவரது தம்பி முகிலன் 25, ஆகியோரை கைது செய்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

