/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் மீது கார் மோதி இருவர் பலி
/
டூவீலர் மீது கார் மோதி இருவர் பலி
ADDED : மார் 10, 2025 01:46 AM
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை மல்லபுரம் நோக்கி டூ வீலரில் சென்றவர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
வேடசந்துார் காந்திநகரை சேர்ந்த டிரைவர் முருகன் 40. இவரது மகன் பாலாஜி 15. இருவரும் குஜிலியம்பாறை இலுப்பப்பட்டியில் உள்ள முருகனின் மாமனார் ராசு வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு முருகன், மாமனார் ராசு, மகன் பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து ஒரே டூவீலரில் குஜிலியம்பாறை மல்லபுரத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். டூவீலரை முருகன் ஓட்டினார்.
இருவர் பலி
குஜிலியம்பாறை மல்லபுரம் ரோட்டில் கன்னிமேக்கிப்பட்டி பிரிவு அருகே டூவீலர் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் முருகன், ராசு ஆகியோர் இறந்தனர். காயமடைந்த பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கரூர் மாவட்டம் கடவூர் சாலிக்கரைப்பட்டி கார் டிரைவர் மோகன்ராஜ் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மற்றொரு விபத்தில் பலி 1
வேடசந்துார் தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ராமச்சந்திரன் 31. இவர்
விட்டல்நாயக்கன்பட்டி தனியார் நுாற்பாலையில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு பணி முடித்த தொழிலாளர்களை ஏற்றி வேடசந்துார் நோக்கி சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி வேடசந்துார் நெடுஞ்சாலையில் துணிக்கடை அருகே சென்றபோது முன் சென்ற நுாற்பாலை வேன் பஞ்சராகி நின்றது. இதை கவனித்த ராமச்சந்திரன், தனது வேனை ஓரமாக நிறுத்தி விட்டு, பஞ்சரான வேனுக்கு உதவி செய்தார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற லாரி, ராமச்சந்திரன் வேன்மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அந்த வேனில் இருந்த எரியோடு எருதப்பன்பட்டியை சேர்ந்த ராஜாமணி 50, இறந்தார். கல்பனா ,பெரியசாமி, மீனாட்சி, சுகுணா, சங்கீதா, பிரவீனா, கார்த்திகேயன், ஜோதி, சீதாலட்சுமி, கவுதம் குமார் ஆகியோர் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.