/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.4.66 கோடி கையாடலில் இரு அலுவலர்கள் கைது
/
ரூ.4.66 கோடி கையாடலில் இரு அலுவலர்கள் கைது
ADDED : ஆக 09, 2024 02:40 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த கணக்கு பிரிவு இளநிலை உதவியாளர் சரவணன் கைதையடுத்து ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாக அலுவலர் வில்லியம், கண்காணிப்பாளர் சாந்தியை போலீசார் கைது செய்தனர்.
இம்மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளரான சரவணன் 35, மக்கள் செலுத்திய வரித்தொகை ரூ.4.66 கோடியை கையாடல் செய்தார். மாநகராட்சி நிர்வாகம் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி 45, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் 49, இளநிலை உதவியாளர் சதீஷ் 38, ஆகியோரை சஸ்பெண்ட் செய்தது. இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் சரவணனை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் மாநகராட்சியில் பணிபுரியும் சில அலுவலர்களுக்கு கையாடலில் தொடர்பு இருப்பது தெரிந்தது. குற்றப்பிரிவு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.