/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை
/
போக்சோ குற்றவாளி இருவருக்கு சிறை
ADDED : மார் 23, 2024 06:23 AM
திண்டுக்கல்: சிறுவன்,சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் அம்மையநாயக்கனுார் பள்ளபட்டியை சேர்ந்தவர் பசுபதிராஜா29.
இவர் 2020ல் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அம்மையநாயக்கனுார் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி பசுபதிராஜாவுக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.
இதேபோல் திண்டுக்கல் -வேடசந்துார் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் 21. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் மனோஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. மனோஜ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.3,000 அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார்.

