/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த ரோடுகளால் தடுமாறும் டூவீலர் ஓட்டிகள்
/
சேதமடைந்த ரோடுகளால் தடுமாறும் டூவீலர் ஓட்டிகள்
ADDED : ஆக 26, 2024 07:11 AM

சேதமான ரோடு
திண்டுக்கல்- திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் மழைநீர் தேங்கி பெரும் பள்ளங்களுடன் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டுகள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். ரவிச்சத்திரன், திண்டுக்கல்.
.......................---
குவி லென்ஸ் சேதம்
திண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் குவி லென்ஸ் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது .இதனால் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கிறது. சுற்றுலா பயணிகள் ஏராளமான வந்து சொல்வதால் இதை சரி செய்ய வேண்டும் ஜேக்கப், திண்டுக்கல்.
...............---
மின் கம்பத்தால் விபத்து
மோளப்பாடியூரில் இருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் ரோட்டில் ரோடு விளிம்பில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. மின் கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- பாண்டியராஜ், வடமதுரை.............---
குப்பையால் தொற்று
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் சிதறி கிடக்கிறது .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. முறையாக குப்பை தொட்டி வைத்து தினந்தோறும் அகற்ற வேண்டும். சக்திவேல், திண்டுக்கல்.................----
ஸ்டேஷன் முன் மழை நீர் தேக்கம்
சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.இதனால் நோய் பருவம் அபாயம்,விபத்து ஏற்பட வழி வகுப்பதால் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். வீரமணிகண்டன், சாணார்பட்டி..........----
விபத்துக்கு வாய்ப்பு
கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி ரோட்டில் இருந்து ஈசக்காம்பட்டி செல்லும் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் டூவீலர்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பழனிச்சாமி கள்ளிமந்தையம்.
.............
சாக்கடையை சீரமையுங்க
நத்தம் அருகே கம்பிளியம்பட்டியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது .சாக்கடையை சீரமைத்து தர வேண்டும்.வெ.பாஸ்கரன், சுக்காம்பட்டி.
................