/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறிவிக்காத மின்தடை: சிறு குறு தொழில்கள் பாதிப்பு
/
அறிவிக்காத மின்தடை: சிறு குறு தொழில்கள் பாதிப்பு
ADDED : செப் 05, 2024 03:56 AM
கோபால்பட்டி, : கோபால்பட்டி சுற்றுப் பகுதிகளில் அறிவிக்காத மின்தடையால் சிறு, குறு தொழில்கள் ,பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கோபால்பட்டி சுற்றி 30க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம பகுதிகளில் சில நாட்களாக பகல் நேரங்களில் அடிக்கடி அறிவிக்காத மின்தடை ஏற்படுகிறது.
தையல் கடைகள், சிறு கார்மென்ட்ஸ் நிறுவனங்கள், மாவு அரைக்கும் கடை, ஜெராக்ஸ் கடைகள் என பல்வேறு சிறு குறு தொழில்கள் செய்வோர் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தையல் கடை உரிமையாளர் ரிஜ்வானா பர்வீன் பானு கூறுகையில், ''கே.அய்யாபட்டியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறேன்.
நேற்று மட்டும் காலை 9:10 , 10:50, மதியம் 12:50 மின்தடை ஏற்பட்டு 2:57க்குதான் சப்ளை வந்தது.
மீண்டும் மதியம் 3:20 , மாலை 6:10, 6:25 என ஒரு நாளைக்கு 8 முறைக்கு மேல் அறிவிக்காத மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.