/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துார்வாராத வரத்துக் கால்வாய்; தெருக்குழாய்கள் இல்லை
/
துார்வாராத வரத்துக் கால்வாய்; தெருக்குழாய்கள் இல்லை
துார்வாராத வரத்துக் கால்வாய்; தெருக்குழாய்கள் இல்லை
துார்வாராத வரத்துக் கால்வாய்; தெருக்குழாய்கள் இல்லை
ADDED : ஏப் 25, 2024 06:16 AM

ஒட்டன்சத்திரம் : வலையபட்டி,கோவிந்தாபுரம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இருந்த போதிலும், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களும் பல உண்டு. வலையப்பட்டியிலிருந்து குருவிக்காரன் வலசு வரை தார் ரோடு போடப்பட்டுள்ளது.
இதேபோல் வலையபட்டியில் இருந்து குட்டம் ஊராட்சி வரை தார் ரோடு போடப்பட்டுள்ளது. கருமலை ஓடையின் குறுக்கே தலா ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் செலவில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.
வங்க நரிமேடு பகுதியில் ஆழ்துளை குழாய் , ஆதிதிராவிடர் மயானம் அருகே , மதுரைவீரன் கோயில் அருகே போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. போர்வெல்களில் தண்ணீர் வற்றியதால் நங்காஞ்சியாற்று அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
ஊராட்சியில் செல்லும் நங்காஞ்சி ஆற்று கால்வாய்களை தூர்வாரி அணையிலிருந்து நீர் திறந்த விடப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து ஓங்கும்.வலையபட்டி கோட்டூர் செல்லும் தார் ரோடு சீரமைக்கப்பட்டு, வலையபட்டி - குருவிக்காரன்வலசு தார் ரோட்டிற்கு இணைப்பு ரோடு போடப்பட்டுள்ளது. இங்குள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும் விழாக்களுக்கு வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் இடங்களில் தெரு குழாய்கள் அமைக்க வேண்டும்.
கால்வாயை துார்வார வேண்டும்
வி.காளியம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவர், வலையபட்டி:நங்காஞ்சி ஆறு வலதுபுற உயர் மட்ட கால்வாயை துார்வாரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கிணறுகளில் நீர் மட்டம் உயரும். தெருக்களில் சிமென்ட் ரோடு போடப்பட்டுள்ளது. விடுபட்ட இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும்.
தடுப்பணைகள் சீரமைப்பு
எஸ். பரமேஸ்வரி, வார்டு உறுப்பினர், வலையப்பட்டி: ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணைகளை சீரமைக்கபட்டு உள்ளது. வலையபட்டியிலிருந்து கருமலை பெருமாள் கோயில் செல்லும் ரோடு சீரமைக்க பட்டுள்ளது. தெருக் குழாய்கள் அமைக்கப்படும்.
குடிநீர் பிரச்னை இல்லை
கே.மகேந்திரன், ஊராட்சி தலைவர்:ஜல் சக்தி திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தரப்பட்டுள்ளது.
பல இடங்களில் புதிதாக போர்வெல்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கோவிந்தாபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கோவிந்தாபுரத்திற்கு காவிரி நீர் நங்கஞ்சியாற்று நீர் கொண்டுசெல்வதற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் முடிந்தவுடன் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறும். நங்காஞ்சி ஆறு அணை நீர் வருவதால் தற்போதைக்கு குடிநீர் பிரச்சினை இல்லை.

