ADDED : ஜூலை 03, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரகடம்பு கோபு, சரவணன் முன்னிலை வகித்தனர்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. துணைத் தலைவர் தேவசகாயம் நன்றி கூறினார்.