/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயணிகளை பரிதவிக்க விடும் பராமரிப்பில்லாத அரசு பஸ்கள்; பாதி வழியில் பழுதாகி நிற்கும் அவலம்

ADDED : ஜூன் 11, 2024 11:54 PM

தாண்டிக்குடி : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பாதி வழியில் அடிக்கடி பழுதாகும் அரசு லொடக்கு பஸ்களால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
மலைப்பகுதிக்கு வத்தலக்குண்டு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி பணிமனைகளிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமீப காலமாக அரசு பஸ்கள் பாதி வழியில் பழுதடைந்து நிற்கும் அவலம் தொடர்கிறது. இன்ஜின் பழுது, இழுவைத்திறன் குறைவு, ரேடியேட்டர் பழுது, கூரை சேதம், மாற்று டயர் இல்லாதது என ஒட்டை, உடைசல் நிலையிலுள்ள லொடக்கு பஸ்களால் பயணிகள் நிம்மதி இழந்துள்ளனர். முறையான பராமரிப்பில்லாத இந்த பஸ்களால் பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
நேற்று முன்தினம் வத்தலக்குண்டிலிருந்து தாண்டிக்குடி வந்த அரசு பஸ் பட்லங்காட்டில் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் சாமர்த்தியத்தால் ஒரங்கட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் 30 க்கும் மேற்பட்டோர் மாற்று வாகனம் மூலம் கிராம பகுதியை வந்தடைந்தனர்.
நேற்று காலை திண்டுக்கல்லிருந்து தாண்டிக்குடி வழியாக சென்ற அரசு பஸ் டயர் பஞ்சராகி மாற்று டயரின்றி டிரிப் கட் செய்யப்பட்டு பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். டம்டம் பாறை அருகே வத்தலக்குண்டு - பழம்புத்துார் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது.
இதே நிலை சில நாட்களாக தொடர்கிறது. அரசு பஸ்களை நம்பி பயணிக்க முடியாத நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு பஸ்களை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.