/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரமைக்கப்படாத ரோடுகள்; நாய்களால் தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 18-வது வார்டு மக்கள்
/
சீரமைக்கப்படாத ரோடுகள்; நாய்களால் தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 18-வது வார்டு மக்கள்
சீரமைக்கப்படாத ரோடுகள்; நாய்களால் தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 18-வது வார்டு மக்கள்
சீரமைக்கப்படாத ரோடுகள்; நாய்களால் தொல்லை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 18-வது வார்டு மக்கள்
ADDED : பிப் 23, 2025 06:06 AM

ஒட்டன்சத்திரம், : சீரமைக்கப்படாத ரோடுகளால் வாகனங்களை இயக்க சிரமம், நாய்கள் தொல்லையால் தெருவில் நடமாட பயம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 18 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
திடீர் நகர், வள்ளுவர் நகர், காவேரி நகர், ஏ. எம். கே.நகர், வண்ணாம்பாறை, கருப்பணபுரம், காந்தி நகரை உள்ளடக்கிய இந்த வார்டில் திடீர் நகர் பகுதியில் சாக்கடைகள் அமைத்து பல ஆண்டுகளுக்கு மேலாகி சிதிலமடைந்து காணப்படுகிறது .
இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். குடிநீர் தேவையான அளவுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
மக்களின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. வார்டுக்குள் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
ஆக்கிரமிப்பால் அவதி
எம்.செல்ல பாண்டி,அ.தி.மு.க., மாணவரணி நகர செயலாளர், கருப்பணபுரம்: சப்வே பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்தி சப்வேயை அகலமாக்க வேண்டும். சாக்கடையை துார்வார தாமதமாகும் நேரங்களில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. வார்டுக்குள் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள சாக்கடை முடியும் இடம் குறுகலாக உள்ளதால் மழைக்காலத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதனை அகலப்படுத்த வேண்டும்.
சேதமடைந்த ரோடுகள்
கே.மகுடீஸ்வரன், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் : வார்டில் விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்து வருவதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இங்கு சாக்கடை மற்றும் தேவையான இடங்களில் தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை. தெருக்கள் சந்திக்கும் இடங்களில் உள்ள ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. திடீர் நகர் பகுதியில் சாக்கடையை சீரமைக்க வேண்டும். ஏ.எம்.கே.நகரில் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அப்படியே உள்ளது.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
கிருஷ்ணமூர்த்தி கவுன்சிலர் (தி.மு.க.,): வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்பு தெரு ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்படும். திடீர் நகர், வள்ளுவர் நகர், ஏ.எம்.கே.நகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் வசதி கிடைக்காமல் இருந்து வந்தது.
அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததின் பயனாக புதிய குழாய்கள் அமைத்து நல்ல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.
கழிவு நீர் ஓடை துார்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சாக்கடைகள் துார்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குப்பை தினமும் அள்ளப்படுகிறது.
வள்ளுவர் நகரில் வடிகால் வசதியுடன் கூடிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.