sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சீரமைக்காத சாக்கடைகள்: வீடுகளுக்குள் புகும் கழிவு நீர்: பரிதவிப்பில் திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டு மக்கள்

/

சீரமைக்காத சாக்கடைகள்: வீடுகளுக்குள் புகும் கழிவு நீர்: பரிதவிப்பில் திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டு மக்கள்

சீரமைக்காத சாக்கடைகள்: வீடுகளுக்குள் புகும் கழிவு நீர்: பரிதவிப்பில் திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டு மக்கள்

சீரமைக்காத சாக்கடைகள்: வீடுகளுக்குள் புகும் கழிவு நீர்: பரிதவிப்பில் திண்டுக்கல் மாநகராட்சி 4வது வார்டு மக்கள்


ADDED : ஆக 25, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 25, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சேதமான ரோடுகள்,மழை நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் கழிவுநீர்,சீரமைக்கப்படாத சாக்கடைகள்,அங்கும் இங்குமாய் வளர்ந்து நிற்கும் புற்கள்,குறுகலான தெருக்கள்,எங்கும் சுற்றத்திரியும் நாய்கள்,மாடுகள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநராட்சி 4 வது வார்டு மக்கள்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 6,7 வது குறுக்குத்தெரு,மருதாணிகுளம்,ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் இரவு மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கடிக்கும் கொசுக்களால் மக்கள் வெளியில் வராமல் தங்கள் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். கொசுவலை பயன்படுத்தும் போதிலும் கொசுக்கள் மக்களை கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்றனர். கொசு மருந்து அடிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர். இந்த வார்டில் உள்ள பாதாள சாக்கடைகளை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் எப்போதும் கழிவுநீர் வெளியில் ஓடுகிறது. மழை நேரங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது .

வார்டை சுற்றி அனைத்து தெருக்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டபோது 7வது குறுக்கு தெருவில் மட்டும் ரோடுகளை சீரமைக்காமல் புறக்கணித்துள்ளனர்.

இதனால் இப்பகுதி மக்கள் சேதமான ரோடுகளில் நடமாட முடியாமல் தடுமாறி விழுகின்றனர். இங்குள்ள பள்ளங்களில் இரவில் டூவீலர்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். மழை நேரங்களில் இப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகும் நிலையும் தொடர்கிறது.

பல ஆண்டுகளாக துார்வாராத சாக்கடைகளால் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதன்மூலமும் தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நாய்களும்,மாடுகளும் எப்போதும் ஹாயாக சுற்றித்திரிகின்றன.

இதனால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். இங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கின்றனர்.

திறந்தவெளியில் கழிவு நீர்


வீரய்யன்,டிரைவர் : ஆண்டுக்கணக்கில் சாக்கடைகள் துார்வாராமல் இருப்பதால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்குகிறது. பாதாள சாக்கடை கழிவுநீரும் திறந்தவெளியில் செல்கிறது. பல முறை இதுகுறித்து புகாரளித்து விட்டோம். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்தால் மழைநீரோடு சேர்ந்து கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து மக்களுக்கு தொற்று நோயை பரப்புகிறது. மக்கள் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும்.

ரோடுகள் சேதமாக உள்ளது


முத்து,ஓய்வு அரசு ஊழியர் : தெருக்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. ரோடுகள் 7 வது தெருவில் சீரமைக்கப்படாமல் உள்ளதால் மக்கள் தவிக்கின்றனர். ஏன் எங்கள் தெருவை மட்டும் அதிகாரிகள் புறக்கணித்தார்கள் என்பது தெரியவில்லை. ரோடை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து பல மாதங்களாக அடிக்காமல் இருப்பதால் கொசு தொல்லை உள்ளது. மக்களும் வீட்டில் இருந்தபடி வேதனைப்படுகின்றனர். வாரத்திற்கு இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.

அனுமதிக்க மாட்டோம்


பாலசுப்பிரமணி,ஓய்வு அரசு ஊழியர் : எங்கள் வார்டில் குறுகிய தெருக்கள்,நாய்கள் தொல்லை,கழிவுநீர் தேக்கம் போன்ற பல பிரச்னைகள் உள்ளது. இவற்றின் மீது மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இனி வரும் தேர்தல் நேரத்தில் அரசியல் பிரமுகர்களை தெருக்களுக்குள் அனுமதிக்க மாட்டோம். மக்கள் பிரச்னையை தீர்த்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்


ராஜ்மோகன், கவுன்சிலர்,(அ.தி.மு.க.,): வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். விரைவில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7வது குறுக்கு தெருவில் ரோடுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எம்.எல்.ஏ.,நிதியிலிருந்து ரோடுகள் புதுப்பிக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us