/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
வடமதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 15, 2025 05:55 AM

-வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் விழா மார்ச் 10ல் மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. 4 கால யாக பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
பேரூராட்சித் தலைவர் நிருபாராணிகணேசன், செயல் அலுவலர் பத்மலதா, கவுன்சிலர்கள் மருதாம்பாள், சகுந்தலா, சுப்பிரமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பொருளாளர் முரளிராஜன், கோயில் தக்கார் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் கண்ணன் பங்கேற்றனர்.
வடமதுரை ஸ்ரீபொன் ஆபரண தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பாக 5000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.