ADDED : ஏப் 14, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பிச்சை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேன் டிரைவர் ரவீந்திர ராஜன் 39. வேடசந்துார் வழியாக தனது தந்தை தேவராஜ் 74, அண்ணன் மகள் ஆன்வெஸ்லி 10, உடன் ஊருக்கு சென்றனர்.
தாடிக்கொம்பு அருகே சென்ற போது முன்னால் மல்வார்பட்டி சிக்கையகவுண்டனுாரைச் சேர்ந்த வடிவேல் 33, ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.
வடிவேல், அண்ணன் மகன் கார்த்திகேயன் காயமடைந்தனர். மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. தேவராஜ் 70, இறந்தார். ரவீந்திர ராஜன், ஆன்வெஸ்லி காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

