ADDED : ஜூலை 06, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஜூலை 7
ஓசூரில் இருந்து டூவீலர் உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு மினிவேன் திண்டுக்கல் நோக்கிச் சென்றது. தனியாருக்கு சொந்தமான கிடங்கில் பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் ஓசூருக்கு புறப்பட்டது. வேனை வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் லலித் 28, ஓட்டினார்.
வேடசந்துார் அடுத்த அய்யர்மடம் அருகே சென்ற போது திடீரென பழுதடைந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவர் காயம் இன்றி தப்பினார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
