/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேடசந்துார்......சுதந்திர தின விழா
/
வேடசந்துார்......சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:06 AM
*வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கொடி ஏற்றினார். பி.டி.ஓ., சரவணன் பங்கேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியேற்றினார். வேடசந்துார் காங்., அலுவலகத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது கொடியேற்றினார். வேடசந்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மேகலா கொடியேற்றினார். துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின்,கவுன்சிலர் கார்த்திகேயன் பங்கேற்றனர். வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் பங்கேற்றனர். வேடசந்துார் சாய்பாரத் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் வின்சென்ட் கொடியேற்றினார். சாய்பாரத் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் நர்மதாஸ்ரீ கொடியேற்றினார். வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் கொடியேற்றினார். எஸ்.ஐ., முத்துராமன், சிறப்பு போலீசார் பாலசுப்பிரமணி, அந்தோணி பங்கேற்றனர்.
*தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., திருமலைராஜ் கொடி ஏற்றினார். எஸ்.ஐ., அழகர்சாமி, போலீசார் பழனிசெல்வம்,முனீஸ்வரி, சாந்தி, மாலதி, ரங்கநாயகி பங்கேற்றனர்.
தாடிக்கொம்பு குருமுகி வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாகி செந்தில் குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, தலைமை ஆசிரியர் சியாமளா பங்கேற்றனர்.