/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடை பைன்மரக்காட்டில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் : 5பேர் காயம்
/
கொடை பைன்மரக்காட்டில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் : 5பேர் காயம்
கொடை பைன்மரக்காட்டில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் : 5பேர் காயம்
கொடை பைன்மரக்காட்டில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் : 5பேர் காயம்
ADDED : செப் 08, 2024 05:21 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பைன் மரக்காட்டில் அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 5 பேர் காயமடைந்தனர்.
கொடைக்கானல் பைன் மரக்காட்டில் நேற்று மதியம் துாத்துக்குடியில் இருந்து வந்த சுற்றுலா வேனை டிரைவர் வீராச்சாமி 44, ஒட்டினார். தாழ்வான பகுதியில் வந்த போது பிரேக் பிடிக்காமல் மற்றொரு வேன் மீது மோதியது. இதை தொடர்ந்து ஐந்து கார்கள், டூவீலர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திராவை சேர்ந்த மூவர், துாத்துக்குடி வேன் டிரைவர் உட்பட 5பேர் காயமடைந்தார்.இவர்கள் கொடைக்கானல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பிரேக் பிடிக்காத வேன் மோதியதில் அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய விபத்து சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.இப்பகுதி ரோடு சேதமடைந்து இருப்பதே விபத்துக்கு காரணம் என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டினர். இப்பகுதியில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் நடந்து ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறை இனியாவது இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.