ADDED : மார் 02, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வேலம்மாள் போதி வளாகத்தில் பள்ளி முதலாம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் முத்துராமலிங்கம், இயக்குநர் சசிகுமார்,கல்வி இயக்குநர் கீதாஞ்சலி சசிகுமார் , பள்ளி முதல்வர் திலகா முன்னிலை வகித்தனர். மதுரை வேலம்மாள் மருத்துவமனை மார்பகப் புற்றுநோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகன்யா , இந்திய ஸ்கேட்டிங் அணி வீராங்கனை ஆதித்தியா விஷ்வா வீனா பேசினர்.
ஆசிரியர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒடிசி - 2025 என்ற தலைப்பில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.