/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேம்பார்பட்டி சவேரியார் சர்ச் தேர் பவனி
/
வேம்பார்பட்டி சவேரியார் சர்ச் தேர் பவனி
ADDED : மே 03, 2024 06:38 AM

கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி புனித சவேரியார் சர்ச் திருவிழாவில் நடந்த தேர் பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி புனித சவேரியார் சர்ச் திருவிழா ஏப்.30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்த நிலையில் சவேரியார், செபஸ்தியார், அந்தோணியார் தேர் பவனி நடந்தது.
வேம்பார்பட்டியில் மூன்று மதத்தினரும் வசித்து வரும் நிலையில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களால் எந்த மத திருவிழாவாக இருந்தாலும் மற்ற மதத்தினர் அதனை வரவேற்று பலகைகள் வைப்பது, விழாக்களுக்கு சீர் வரிசை கொடுப்பது மத நல்லிணக்க முறையில் நடைபெறுகிறது.
இதேபோல் நேற்று நடந்த சவேரியார் சர்ச் தேர் பவனியில் முஸ்லிம் ஜமாத் சார்பாக பி.எம்.எஸ்.கே.அபுதாகிர் தலைமையில் இனிப்புகள், சீர்வரிசைகள் வழங்கி வரவேற்றனர்.
இதேபோல் ஹிந்துக்களும் ஊர் நாட்டாமை சார்பாக வரவேற்க மத நல்லிணக்கத்துடன் திருவிழா நடந்தது.