/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
/
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
கழிவு நீர் தேக்கத்தால் படையெடுக்கும் விஷ பூச்சிகள் சின்னாளபட்டி பாரதிநகரில் தொற்றுகளுடன் அச்சம்
ADDED : ஜூலை 11, 2024 06:19 AM

சின்னாளபட்டி: சிதிலமடைந்த ரோடு, அள்ளப்படாத சாக்கடை கழிவுகள், விஷ பூச்சிகள படையெடுப்பு என தொற்று அபாய பகுதியாக மாறியுள்ள சின்னாளபட்டி பாரதிநகரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னாளபட்ட பேரூராட்சிக்கு உட்பட்ட பூஞ்சோலை பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சூழலில் முரளி மருத்துவமனை, பாரதி நகர், விநாயகர் கோவில் தெரு வழியாக இப்பகுதியை இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.
இத்திருக்களில் உள்ள சிமென்ட் ரோடு 25 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்டது. குடியிருப்போர், வங்கி வாடிக்கையாளர்கள் வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளையும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குறுகிய கழிவுநீர் வடிகால் பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. தெருக்களின் இணைவு பகுதிகள் அமைக்கப்பட்ட தரைப்பாலங்கள் கம்பி கான்கிரீட் இல்லாத சூழலில் சேதமடைந்துள்ளன. வாகனங்களில் கடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர் .
பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தபோதும் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பூஞ்சோலை, கஸ்தூரிபா மருத்துவமனை ரோடு, தம்பித்தோட்டம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளின் சந்திப்பாக உள்ள பாரதிநகரின் பிரச்னைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
விபத்துகள் தாராளம்
துரை.தில்லான்,ஓய்வு பெற்ற ஆசிரியர், பார்திநகர் : இப்பகுதியில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பின்றி சேதம் அடைந்து வரும் சூழலில் விபத்துகளை ஏற்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. வடிகால் பராமரிப்பின்றி அசுத்த நீர் தேங்குவதால் கொசுத்தொல்லை தாராளமாகி விட்டது. காலியிடங்களில் முள், புதர் செடிகள் மண்டி விஷப் பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளன. பலமுறை பேரூராட்சி நிர்வாகம், அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பராமரிப்பு இல்லை
வீரமணி ,ஓய்வு வங்கி அதிகாரி, பாரதிநகர் : சாக்கடையில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனை சீரமைப்பதில் தொய்வு நிலவும் சூழலில் துாய்மை பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் பணிக்காக இங்கு வருவதில்லை. கண்காணிக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாக அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தரைப்பாலம் அருகே ரோடு இணைவு பகுதியில் அசுத்த நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறி உள்ளது. விஷப் பூச்சிகளின் நடமாட்டத்தால் தெருக்களில் நடமாடுவோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
தொற்று பாதிப்பால் அவதி
சண்முகம் ,ஜவுளி வியாபாரி, பார்தி நகர் : சாக்கடை பராமரிப்பு கண்டு கொள்ளப்படவில்லை. துப்புரவு பணிகளை கண்காணிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். கால்வாயில் கழிவுநீர் கடந்து செல்ல ஏதுவாக இல்லை. கழிவுகள் குவிந்து மண் மேவிய நிலையில் அசுத்த நீர் தேங்குகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தேங்குகிறது. மழைக்காலத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. அசுத்த நீர் தேங்குவதால், கொசு, ஈ, வண்டுகள் உள்ளிட்ட பூச்சித்தொல்லை அதிகம் உள்ளது. பலர் டெங்கு, மலேரியா போன்ற தொற்று பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.