/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் ஊர்வலம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
/
விநாயகர் ஊர்வலம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 11, 2024 12:50 AM
பழநி : பழநி ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து சக்தி சங்கமம் அமைப்பு சார்பில் பழநி அடிவாரம் பாத விநாயகர் கோயில் முதல் சண்முகா நதிவரை கிரி வீதி வழியாக செப்.13, 14ல் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி, பாதுகாப்பு கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரி வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: செப்.13 ல் ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது. சுமையாக அல்லது பல்லக்கு மூலம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

