ADDED : செப் 18, 2024 04:43 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வட்டார விஸ்வகர்மா குலமக்கள் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் விஸ்வகர்மா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு நிகழ்ச்சி பொறுப்பாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை மாநிலத் தலைவர் அய்யப்பன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், பொதுச் செயலாளர் மகேஷ்வரன், துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் முருகபாண்டியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சுரேஷ் கண்ணன் பேசினர். நிர்வாகிகள் ராம்குமார், கணேஷ், விஜயராஜ், கலந்து கொண்டனர். அனைத்து விஸ்வகர்மா குலமக்கள் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
நத்தம்: நத்தத்தில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்ம குரு ஜெயந்தி விழா நடந்தது. வட்டார தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.முருகேசன், பொருளாளர் ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சங்க பெயர் பலகை திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஐந்தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கபட்டது.