/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வார்டு குளறுபடியால் தவியாய் தவிக்கும் விட்டல் நகர்
/
வார்டு குளறுபடியால் தவியாய் தவிக்கும் விட்டல் நகர்
வார்டு குளறுபடியால் தவியாய் தவிக்கும் விட்டல் நகர்
வார்டு குளறுபடியால் தவியாய் தவிக்கும் விட்டல் நகர்
ADDED : பிப் 28, 2025 06:35 AM

பழநி: பழநி இரண்டாவது வார்டில் உள்ள விட்டல் நகர் பகுதி மக்கள் தேர்தலின் போது வெவ்வேறு வார்டில் சேர்க்கப்பட்டு ஒட்டளிக்கவைப்பதால் இவர்கள் எந்த வார்டில் உள்ளோம் என்பது தெரியாது உள்ளதால் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பரிதவிக்கின்றனர்.
பழநி2வது வார்டு பகுதியில் சத்யா நகரில் உள்ள அண்ணா சாலை பகுதிகள் அடங்கும். இங்கு தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
மேலும் இப்பகுதிக்கு அருகே உள்ள விட்டல் நகர் பகுதி எந்த வார்டு வரையறைக்குள் வருகிறது என தெளிவில்லாத நிலை இருப்பதால் வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் இப்பகுதிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள சிரமம் ஏற்படுவதோடு அப்பகுதியினர் அத்திபட்டி கிராமம் போல் அனாதையாய் விடப்பட்டுள்ளனர்.
குழப்பத்தில் மக்கள்
சிவக்குமார், தொழில் முனைவோர், விட்டல் நகர்: நகராட்சி தேர்தலின் போது நான்காவது வார்டு பகுதி கவுன்சிலருக்கு விட்டல் நகர் பகுதி வாக்காளர்களுக்கு வாக்களித்தோம். அதன் பின் நாடாளுமன்ற தேர்தலின் போது இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியல் உடன் இணைக்கப்பட்டுள்ளோம். தற்போது எந்த வார்டில் உள்ளது என்ற குழப்பம் உள்ளது.அரசு தெளிவு படுத்த வேண்டும்.
குழப்பமான சூழல்
முருகேசன், தனியார் ஊழியர், விட்டல் நகர்: விட்டால் நகர் பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் சாலைகள் முறையாக இல்லை. சாக்கடைகள் துார்வாராததால் கொசு அதிகரித்து வருகிறது .மேலும் சாலை ஓரங்களில் புதர் மண்டி கிடைப்பதால் பாம்பு தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்ற குழப்பமான சூழல் உள்ளது.
பாதிக்கும் இளைஞர்கள்
ஜான் ஜோசப், பழைய இரும்பு வியாபாரம், அண்ணாசாலை : எங்கள் பகுதியில் போதை இளைஞர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது. போதையில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கண்காணிக்க போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
பணி செய்ய தயார்
கமலா, கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : விட்டல் நகர் பகுதி மக்கள் நகராட்சி தேர்தலின் போது வேறு வார்டு பகுதியில் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது வார்டு மாறி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு எதுவும் பெறப்படவில்லை. மக்களுக்கான பணியை செய்ய தயாராக உள்ளேன். சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் சில இடங்களில் சாலைகள் அமைக்கப்பட முடியாத சூழல் உள்ளது. போதை நபர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.