/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்
/
துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்
துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்
துணை மின் நிலையம் அமைக்க விவேகானந்த பள்ளி நிலம் தானம்
ADDED : மார் 11, 2025 05:32 AM

பண்ணைக்காடு: கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் தொடரும் மின்தடைக்கு தீர்வு ஏற்படுத்த துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்து வந்தது. நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமானது.
மின்தடை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த துணை மின் நிலையம் அமைக்க மூலையாறு பகுதியில் 1.21 ஏக்கர் நிலத்தை திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் கீழ் இயங்கும் பண்ணைக்காடு விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு தானமாக வழங்கியது. இதற்கான ஆவணத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விடம் பள்ளி செயலர் கங்காதரனந்த வழங்கினார்.
மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன், செயற்பொறியாளர் மேத்யு பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.