ADDED : ஜூன் 27, 2024 06:22 AM
ஒட்டன்சத்திரம் : கொத்தயத்தில் சிட்கோ அமைக்க வேண்டும் என 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கொத்தயம் வெடிக்காரன்வலசு அரளிகுத்துகுளத்தில் சிட்கோ அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு சிட்கோ கொண்டு வரவேண்டும் என தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ் உடன் இருந்தனர்.
இது போல் நா.த.க., சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர் மாரியப்பன் தலைமையில் சிட்கோ அமைப்பதை கைவிட கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.