/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓவியங்களுக்கு பெருமை சேர்த்த 'வார்லி': பழமையிலும் புதுமை படைத்த மாணவர்கள்
/
ஓவியங்களுக்கு பெருமை சேர்த்த 'வார்லி': பழமையிலும் புதுமை படைத்த மாணவர்கள்
ஓவியங்களுக்கு பெருமை சேர்த்த 'வார்லி': பழமையிலும் புதுமை படைத்த மாணவர்கள்
ஓவியங்களுக்கு பெருமை சேர்த்த 'வார்லி': பழமையிலும் புதுமை படைத்த மாணவர்கள்
ADDED : ஆக 17, 2024 01:51 AM

திண்டுக்கல்
இந்தியாவின் பிரசித்தி பெற்ற பழங்குடி ஓவியங்களில் ஒன்று வார்லி. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வாழும் வார்லி பழங்குடிமக்கள் உருவாக்கிய ஓவியக்கலை ஆகும். இந்த ஓவியக் கலை மகாராஷ்டிரா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தொடக்கத்தில் குகையில் தீட்டப்பட்டு வந்த இந்த ஓவியக் கலை வீட்டு சுவர், துணி என வளர்ந்திருக்கிறது. வார்லி ஓவியக் கலை இரண்டாயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட தொன்மையுடையது. மனிதன் குகைகளை வசிப்பிடமாக கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகள் , சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள்.
பண்டைய கால ஓவியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், சாய் யுகா ஆர்ட்ஸ் கிளாஸ் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஓவியப்போட்டியை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்டோர் வார்லி ஓவியங்களை தீட்டினர் .
இதில் பங்கேற்றோர் , போட்டி ஏற்பாட்டாளர்கள் பகிந்து கொண்ட கருத்துகள் இதோ...
விழிப்புணர்வு ஏற்படுத்தவே போட்டி
முத்துராமன், தாளாளர், அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி : வார்லி ஓவியக் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஓவியப்போட்டிகள் நடந்தது. இது வித்தியாசமான ஓவியக்கலை. பலரும் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பல ஆண்டுகள் தொன்மையுடைய இந்த கலையை அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்றனர்.
பழமை வாய்ந்த வார்லி ஆர்ட்
அங்கு விசாலாட்சி, நிறுவனர், சாய் யுகா ஆர்ட் க்ளாஸ் : கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் , சாய் யுகா ஆர்ட்ஸ் கிளாஸ் சார்பில் பண்டைய கால ஓவியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் ஓவியப்போட்டியை நடத்தினோம். வார்லி ஆர்ட் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். ஓவியங்களில் மிகவும் பிரதிசித்திபெற்ற பழமை வாய்ந்தது வார்லி ஆர்ட். முக்கோணம், சதுரம், வட்டம், செவ்வகம் உள்ளிட்ட வடிவங்களை கொண்டு மட்டுமே இந்த ஓவியம் வரையப்படும். இந்த வடிவங்களை வைத்தே பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.
புதுவித அனுபவம்
இறைமலர், மாணவி, அட்சுதா பள்ளி : ஓவியப்போட்டிகள் முழுவதும் வார்லி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்தது. பழங்குடியின மக்களின் வாழ்வியல் குறித்து எடுத்துரைக்கும் இந்த வார்லி ஓவியங்கள் 4 வடிவங்களை கொண்டு மட்டுமே வரையும் வகையில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வடிவமும் விவசாயம், கட்டடங்கள் என தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தியதை காட்டும் வகையில் இந்த வார்லி ஓவியங்கள் அமைந்துள்ளன. இந்த ஓவியப்போட்டி புதுவித அனுபவத்தை கொடுத்தது.
திறமையை அதிகரிக்கிறது
மயூரா, மாணவி, அங்குவிலாஸ் பள்ளி : வார்லி ஓவியங்களால் எனது கற்பனை வளம் கிரியேட்டிவ் திறமையை அதிகப்படுத்துகிறது. பழங்கால மனிதர்கள் 3 நிறங்களை பயன்படுத்தி உள்ளனர். வார்லி ஓவியங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள நடக்கும் இந்த விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கொடுக்கப்படும் தலைப்பை வைத்து 50 நிமிடங்களில் 4 வடிவங்களை வைத்து ஓவியங்கள் வரைந்தோம்.
பழங்குடியினர் கண்டறிந்தது
தியாஸ்ரீ, மாணவி, தக் ஷ ஷீலா பள்ளி : மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற ஓவியங்களாக இருப்பது இந்த வார்லி ஆர்ட்.தற்போது தொழில்நுட்பங்கள் அதிகரித்து விட்டது. ஆனால் அந்த காலங்களில் தங்கள் பார்ப்பதை ஓவியங்களாக வரைந்து வாழ்வியலை மேற்கொண்டுள்ளனர். இந்த வார்லி ஆர்ட் வரைவதால் என்னுடைய ஓவியம் வரையும் திறமை அதிகரிகிக்கிறது.