/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
/
இரு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
ADDED : மார் 23, 2024 01:51 AM
திண்டுக்கல்:கொலை வழக்கு விசாரணையில் ஆஜராகாத இரு இன்ஸ்பெக்டர்களுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் கொடைரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் 2019ல் மதுரை கே.புதுாரை சேர்ந்த பாலாஜி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த ஹரிதரன் உட்பட 4 நால்வர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
விசாரணைக்கு அப்போது கொடைரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர்களாக இருந்த கீதாதேவி, செல்வி இருவரும் ஆறு மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி மெகபூப் அலிகான் உத்தரவிட்டார்.
கீதாதேவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனிலும், செல்வி திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனிலும் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகின்றனர்.

