/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் கோவை எஸ்.ஐ.,க்கு வாரன்ட்
/
பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் கோவை எஸ்.ஐ.,க்கு வாரன்ட்
ADDED : மே 18, 2024 01:35 AM
நிலக்கோட்டை:வழக்குகளில் ஆஜராகாத பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர், கோவை எஸ்.ஐ.,க்கு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ., யாக பணிபுரிந்தவர் கேத்ரின் மேரி.
தற்போது கோவை துடியலுார் மகளிர் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக உள்ளார். நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மூன்று வழக்கு தொடர்பாக இவர் நீண்ட நாட்களாக ஆஜராகவில்லை. நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, விருவீடு ஸ்டேஷன்களில் பணிபுரிந்தவர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி. தற்போது பொள்ளாச்சி மேற்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரும் நிலுவையில் உள்ள 6 -வழக்குகளில் ஆஜராகவில்லை.
இதை தொடர்ந்து இருவருக்கும் பிடி வாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.

