/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலை நீரோடைகளில் கழிவுகள்; அதிகாரிகள் ஆய்வு
/
சிறுமலை நீரோடைகளில் கழிவுகள்; அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 28, 2025 06:31 AM

திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் சிறுமலை நீரோடைகளில் காட்டேஜ்களின் கழிவுகள் கலப்பதை ஊராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் சிறுமலையில் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். சிலர் இங்கு தங்கி  விடுமுறையை செலவிடுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக வனப்பகுதிகளுக்குள் பல காட்டேஜ்கள் உள்ளது.  காட்டேஜ் கழிப்பறை  கழிவுநீரை பைப்கள் மூலம் அருகிலிருக்கும் நீரோடைகளில் கலக்கின்றனர்.   ஓடை நீரை  வனவிலங்குகள் குடிப்பதால் தொற்று பரவும் நிலை  உள்ளது.
விவசாய நிலத்திற்குள் பாய்ச்சும் போது நிலம்  பாழாகிறது இதனால்  விவசாயிகள்  விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது . இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக   சிறுமலை ஊராட்சி அலுவலர்கள் சிறுமலை புதுார் பகுதிகளில் செயல்படும் காட்டேஜ்களில் ஆய்வு செய்தனர்.  காட்டேஜ் கழிவுகளை நீரோடைகளில் கலக்க கூடாது.
குப்பையை முறையாக  ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
நத்தம்  : பூதகுடி ஊராட்சி அலுவலகம் அருகே குப்பை  தீவைத்து எரிப்பதால் சுகாதார பிரச்னை இருந்து வந்தது.   தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் செய்தி வெளியானது.
வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பெயரில்   ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் ஊராட்சி பகுதியில் உள்ள குப்பை  அனைத்தும் அகற்றப்பட்டது.   குப்பையில் தீ வைத்து எரிக்காமல் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

