/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 23, 2024 04:56 AM

முள்செடிகளால் அவதி
கோபால்பட்டி அருகே விலக்கு ரோடு வழியாக வடமதுரை செல்லும் ரோட்டில் மந்தநாயக்கன்பட்டியில் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதி அடைகின்றனர். வீரா,அய்யாபட்டி....................----
மோடு சேதத்தால் தவிப்பு
குஜிலியம்பாறை ஆர். கோம்பை ஆணைகவுண்டன்பட்டி முதல் பூனைகல் வழியாக ரெட்டியபட்டி காலனி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதன் வழியாக செல்லும் மக்கள் சிரமப்படுவதால் ரோடை புதுப்பிக்க வேண்டும். பெருமாள், கோம்பை.
................-----
வீணாகும் குடிநீர்
வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் எச்.டி.எப்.சி., பேங்க் எதிரே காவிரி குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது குழாய் உடைப்பை நிர்வாகம் சரி செய்ய வேண்டும். சையது பாபா, வேடசந்துார்.
...............------
குப்பையால் குமட்டல்
திண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் குப்பையை கொட்டி குவிந்துள்ளனர். பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது .இதன் வழியே சுற்றுலாப் பயணிகள் அதிகம் சென்று வருவதால் இதை அகற்ற வேண்டும். ராமசாமி, திண்டுக்கல்.
...........--------சேதமான சாக்கடை
திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் சாக்கடை முற்றிலும் சேதமடைந்துள்ளது .குறுகலான ரோடு என்பதால் இரவு நேரங்களில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது .சி.ஜோஸ்வா, திண்டுக்கல்.
.............--------
பயமுறுத்தும் மின் கம்பம்
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் மிக்கேல் ஆண்டவர் கோயில் புதுத்தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது .மழை காலம் என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . மின் கம்பத்தை மாற்ற வேண்டும். பாஸ்கரன், திண்டுக்கல்.
....................--------
தாழையூத்து ஊராட்சி நரிக்கல்பட்டி மருத்துவமனை ரோட்டில் சாக்கடை துார்வராமல் கழிவுநீர் தேங்கி வீடுகளில் புகுந்து விடுகிறது .பொதுமக்கள் பாதிக்கின்றனர் .சுகாதார கேடும் ஏற்படுகிறது. சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசன்,நரிகல்பட்டி.
..............

