/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைப்பால் அரசு பள்ளி முன் வழிந்தோடும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் அரசு பள்ளி முன் வழிந்தோடும் குடிநீர்
குழாய் உடைப்பால் அரசு பள்ளி முன் வழிந்தோடும் குடிநீர்
குழாய் உடைப்பால் அரசு பள்ளி முன் வழிந்தோடும் குடிநீர்
ADDED : ஜூலை 06, 2024 06:04 AM

ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாய்களில் அழுத்தம் தாங்காமல் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதை அவ்வப்போது சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில் கே .ஆர் .அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் முன்பு தார் ரோட்டின் கீழ் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. வெளியேறும் தண்ணீர் நுழைவு வாயில் பகுதியில் சூழ்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. தண்ணீர் பல நாட்கள் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் அபாயத்துடன் , மாணவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. உடைந்த குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.
................
விரைவில் சீரமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ரோட்டின் கீழ் ஆழமாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் மெயின் குழாய் இது என்பதால் இந்த பணியை முடிக்க குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படும். விரைவில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படும்.
- திருமலைச்சாமி, நகராட்சி தலைவர்,ஒட்டன்சத்திரம்.
...