/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்நடைகளுக்கு தண்ணீர் -; மாநகராட்சி ஏற்பாடு
/
கால்நடைகளுக்கு தண்ணீர் -; மாநகராட்சி ஏற்பாடு
ADDED : மே 05, 2024 04:45 AM

திண்டுக்கல், : ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் தண்ணீர் பருக வசதியாக மாநகராட்சி சார்பில் 20 இடங்களில் சிறிய தண்ணீர் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீடுகளிலே முடங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள், நாய்கள், பறவைகள் தண்ணீருக்காக தவித்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி கமிஷ்னர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், பொது இடங்கள் என 20 இடங்களில் சிறு தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு மாநகராட்சி தண்ணீர் வாகனம் மூலம் நீர் நிரப்பட்டது. குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு ஒரு முறை இதனை கண்காணித்து மீண்டும் நீர் நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.