/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிக்கொம்பில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
/
தாடிக்கொம்பில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : மே 16, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வ விநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் பைரவர் சன்னிதியில் சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்